கனடாவில் இந்திய அமைப்புகள் மோடிக்கு பாராட்டு..!

-MMH

                            கொரோனா பாதிப்புகளை கட்டுபடுத்த இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டது. இந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படும் பணி கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. உள்நாட்டு தேவைகள் போக தடுப்பூசிகள் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதே போன்று கனடாவுக்கும் கெரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கனடா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து டொரான்டோ பகுதியில் உள்ள சாலையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.  மேலும் கனடா இந்தியா நட்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-கோபி.

Comments