கொரானோ நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு முகாம்!!

     -MMH
    வால்பாறையில் கொரானோ நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த  வால்பாறை  கால்பந்து சங்கம் சார்பில் நேற்று  கொரானோ நோய் தொற்று குறித்து  விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தலைவர் பிரமேஸ் முன்னிலை வகித்தார். மேலும் கால்பந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

-திவ்யா குமார், வால்பாறை.

Comments