வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கிய வாகனத்தின் நடுப்பகுதி இரண்டாகப் பிளந்து விபத்து!!

     -MMH

     பொள்ளாச்சி ஆனைமலை வழியாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சரக்கு வாகனம் சென்ட்ரிங் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு கோட்டூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தென்சங்கம்பாளையம் அருகே வேகத்தடையில் வேகமாக ஏறி இறங்கிய பொழுது வாகனத்தின் நடுப்பகுதி இரண்டாகப் பிளந்தது.  அதிர்ஷ்டவசமாக ஓட்டுனருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்துக்கான காரணம் என்ன என்ற  விசாரணையில்  ஓட்டுநரின் அஜாக்கிரதை, அதிவேகம், அதிக பாரம் எனக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ் குமார், கோவை தெற்கு.

Comments