கோவையில் என்.ஜி.பி.கல்வி குழுமம் சார்பாக,நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!

 

-MMH

              கோவையில்  என்.ஜி.பி.கல்வி குழுமம் சார்பாக பெற்றொர்களுக்கும் மாணவ,மாணவிகளுக்கும் நீட் தேர்வு குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.கோவை என்.ஜி.பி.பள்ளி மற்றும் நாமக்கல் க்ரீன் பார்க் கேரியர் அகாடமி இணைந்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பயிற்சியை அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.முன்னதாக இதற்கான துவக்க விழா என்.ஜி.பி.கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.  

இதில் என்.ஜி.பி.கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி டாக்டர் தவமணி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர்,என்.ஜி.பி.பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளின் மருத்துவ கல்வி கனவை   நம்பிக்கையுடன் எதிர் கொள்ள   க்ரீன் பார்க் அகாடமியின் சிறந்த நீட் தேர்வு பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து   நடைபெற்ற விழாவில்,சிறப்பு அழைப்பாளராக க்ரீன் பார்க் அகாடமியின் தலைவர் டாக்டர் எஸ்.பி.என்.சரவணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, இலட்சியம்,சுய முயற்சி அவசியம் எனவும்,இதற்கான பயிற்சிகளை மாணவ,மாணவிகளுக்கு வழங்குவதில் க்ரீன் பார்க் அகாடமி முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.தொடர்ந்து அவர்,பேசுகையில், மாணவ,மாணவிகள் பயம் மற்றும்  ,பதட்டமின்றி நீட் தேர்வை  எதிர் கொள்ள குறிப்பாக பெற்றோர்களின் பங்கு அவசியம் உள்ளதாக கூறிய அவர்,கடந்த காலங்களில் க்ரீன் பார்க் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவ,மாணவிகள் அதிகம் பேர் மருத்துவபடிப்பில் சேர்ந்து படித்து வருவதாக தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அகாடமியின் செயலாளர் குருவாயூரப்பன், மாணவ,மாணவிகளின் பெற்றோர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments