தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இன்று அறிவிப்பு வர வாய்ப்பு!!

 

-MMH

                   கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா முழுவதும்  பரவிய காரணத்தால் மாநில அரசுகளும் - மத்திய அரசும்  ஊரடங்கினை பிறபித்தது. பரவலானது படிப்படியாக குறைந்ததால்,   ஊரடங்கும் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வரை ஒவ்வொரு மாதத்தினுடைய இறுதி நேரத்தில் கட்டுப்பாடுகளுடன்கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது.

அதன் அடிப்படையில் இன்றைய  மார்ச் 31 நள்ளிரவு 12மணியுடன் மார்ச் மாதத்திற்காக தளர்வுடன் கூடிய ஊரடங்கு முடிவடைகிறது ,  மேலும் வரும் ஏப்ரல் மாதம் முதல் தளர்வுகள் நீடிக்குமா அல்லது மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடனான அச்சம் சாமானியர்களிடையே ஏற்பட்டுவருகின்றது.

கடந்த சில வாரங்களாகவே  நாடுமுழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகின்ற காரணத்தால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது , மராட்டிய மாநிலத்தில. நாள்தோறும் 10000க்கும் மேற்பட்ட பாதிப்பு அடைந்ததால் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .

தமிழகத்தை பொருத்தவரையில் கடந்த மூன்று தினங்களாக  நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்  பாதிப்படைந்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தபடலாம் அல்லது கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வும் நீட்டிக்கபடலாம்  என தகவல்கள்  வருகின்றனது.

-நவாஸ்.

Comments