பட்டு சேலைகளை நேரடி விற்பனை செய்யும் காமாட்சி சில்க்ஸ் கோவையில்!!

     -MMH
       பட்டு சேலைகளுக்கென பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் பட்டு சேலைகளை நேரடி விற்பனை செய்யும் விதமாக தமிழகத்தின் முதல் கிளையான காமாட்சி சில்க்ஸ் கோவையில் தனது சேவையை துவக்கியது.

பட்டு நகரம் என அறியப்படும் காஞ்சிபுரம் பட்டு என்றாலே தமிழகம் மட்டுமின்றி உலக அளவில் பட்டு சேலைகளுக்கு பிரபலம் காஞ்சிபுரம் பட்டு புடவைகள். இந்நிலையில் காஞ்சிபுரம் பட்டு சேலைகளை நேரடியாக விற்பனை செய்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் காமாட்சி சில்க்ஸ். 

இந்தியாவில் ஹைதராபாத்,கொச்சின்,எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களை தொடர்ந்து தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவை நூறடி சாலையில் காமாட்சி சில்க்ஸ் துவக்கியுள்ளது. இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் மற்றும் ஜே.ஆர்.டி.ரீடெய்ல்ஸ்  நிர்வாக பங்குதாரர் ஆஷா ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து முதல் விற்பனையை ஜே.டி.இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் பெற்று கொண்டார்.

காமாட்சி சில்க்ஸ் குறித்து அதன்  மேலாளர் கிரண்குமார் மற்றும் ஜே.ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், மற்ற ஜவுளி கடைகளில் இல்லாத அளவிற்கு தனித்துவமான அட்டகாசமான டிசைன்களில் இங்கு பட்டு புடவைகள் இருப்பதாகவும், குறிப்பாக காஞ்சிபுரம் நெசவாளர்களிடையே நேரடி கொள்முதல் செய்வதால் குறைந்த விலையில் நல்ல டிசைன் பட்டு புடவைகள் எங்களால் தர முடிகிறது என தெரிவித்தனர். இங்கு வண்ணமயமான பட்டு புடவைகள் குறைந்த விலை ஆயிரம் ரூபாய் முதல் பல இலட்சம் ரூபாய் மதிப்பு புடவைகள் உள்ளது எனவும், மேலும் பிரத்யேகமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டிசைன்களிலும் பட்டு  புடவைகள் தயாரித்து தர உள்ளதாகவும் தெரிவித்தனர். 

பட்டு படவைகள் என்றாலே பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும் சமயத்தில் காஞ்சிபுரம் நேரடி காமாட்சி சில்க்ஸ் கோவையின் பிரதான இடத்தில் துவங்கியுள்ளதால், துவக்க விழாவிலேயே வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments