வால்பாறையில் சிறுத்தை தாக்கி ஆடுகள் பலி! பீதியில் மக்கள்.......
பொள்ளாச்சி வால்பாறை திருவள்ளுவர் நகர் பகுதிக்குட்பட்ட கே டி ஜே காட்டேஜ் பகுதியில் இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் இரண்டு ஆடுகள் சிறுத்தையின் பிடியில் சிக்கிக் கொண்டது. ஒரு ஆடு சம்பவ இடத்திலே பலியானது இன்னொரு ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பித்து பதுங்கியது இதுகுறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூறுகையில்:
நள்ளிரவில் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது காலையில் சென்று பார்க்கும் பொழுது சிறுத்தையிடம் ஆடு சிக்கிக் கொண்டது தெரிய வந்தது என்றார்கள் மேலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி இந்த பகுதியில் நடந்து கொண்டுதான் வருகின்றன வனத்துறை கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
காட்டேஜ் கீழ்ப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கின்றனர் மாலை நேரங்களில் குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதியாகும் மிகவும் பயத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்பது இப்பகுதியிலுள்ள பொதுமக்களின் கோரிக்கையாகும் கோரிக்கையை ஏற்குமா வனத்துறை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-திவ்யா குமார்,வால்பாறை.
Comments