எப்படி இருந்த எச்.ராஜா இப்படி ஆகிட்டார்? பாஜகவினர் அதிர்ச்சி! காரைக்குடி வாக்காளர்கள் குழப்பம் !!

 

-MMH

         தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்திருந்தாலும் தற்போது எப்படியாவது எம்எல்ஏ ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் பாஜகவின் எச்.ராஜா. பிரச்சாரம் தொடங்கியதும் தனது பிரச்சார வாகனத்தில் மோடியின் படத்தை போட்டுக்கொள்ளவில்லை. மாறாக ஜெயலலிதா படத்தை போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தார்.

ஆனால், ஓட்டு கேட்டது பாஜகவின் தாமரை சின்னத்திற்குத்தான். இந்த நிலையில், அவர் தற்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று செய்திருக்கும் காரியம்தான் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. எச்.ராஜா, காரைக்குடி தொகுதிக்கென்று தயாரித்த தேர்தல் அறிக்கை விளம்பர பக்கத்தில், தான் ஒரு பாஜக வேட்பாளர் என்பதைக் கூடச் சொல்லாமல், தன் கட்சிப் பெயரையும் வெளிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர்  என்று அறிவிப்பு செய்தால் வாக்களர்களிடமிருந்து வாக்கு கிடைக்காது என்பதை உணர்ந்து தவிர்த்துள்ளாரா என்கிற சந்தேகம் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் என்றும், இலையில் மலர்ந்த  தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வாக்கு சேகரிக்கிறார். இதனால் பாஜகவினரே குழப்பத்திற்கு ஆளானார்கள். இதுபோதாதென்று, அவர் வெளியிட்டுள்ள குளறுபடியான தேர்தல் வாக்குறுதியால் வாக்காளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

காரைக்குடி பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள  அம்ருத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்று கூறியுள்ளார். மேலும், சிப்காட் தொழிற்பேட்டையே இல்லாத காரைக்குடியில், சிப்காட் தொழிற்பேட்டையை புரனமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

செட்டிநாடு கன்டாங்கிச் சேலைக்கு, கடந்த 2019ல் மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் நான் வெற்றி பெற்றால் செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குடியீடு பெற்றுத் தரப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருப்பது வாக்காளர்களுடையே குழப்பத்தையும் சிரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments