தென்னிந்திய நூற்பாலைகள் சங்க ஆய்வகக் கூடம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.!!

    -MMH 

     சர்வதேச தர நிர்ணயத்திலான அதிநவீன ஆய்வகக் கருவிகளைக் கொண்டு பருத்தி நூலிழைகளின் இயல்பு மற்றும் வேதி பரிசோதனை மேற்கொள்வதற்கான கூடம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்க கட்டிடத்தில் சிட்ரா ஆய்வக கூடத்தை சிஸ்பாவின் முன்னாள் தலைவர் . சவுந்தர்ராஜன் திறந்து வைத்தார். இதில் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கம் (சிட்ரா) ஜவுளித்துறைக்கு பயனுள்ள வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜவுளித்துறையில் பல பிரச்னைகளைகளுக்கு தீர்வு கண்டு, தரத்தை உயர்த்தவும், செலவை கட்டுப்படுத்தவும் சிட்ரா செயல்பட்டு வருகிறது. மூலப்பொருட்களின் அதிகபட்ச பயன்பாடு, இயந்திரங்கள் மற்றும் ஆள் பற்றாக்குறையை சாமளிக்கும் யுக்திகளை மேற்கொண்டு வருவதுடன் 500க்கும் மேலான ஆய்வுகளை மேற்கொண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. பருத்தி, நுாலிழைகளின் இயல்பு, வேதி பரிசோதனைகளை மேற்கொள்ள என்.ஏ.பி.எல் அங்கீகாரம் பெற்றதுடன் சர்வதேச தர நிர்ணயத்திலான அதிநவீன ஆய்வக கருவிகளைக் கொண்டுள்ளது. சிட்ராவின் ஆய்வகங்கள், பரிசோதனைகளுக்கு  ASTM, ISO, BS, IS போன்ற முறைப்பாடுகளை பின்பற்றி வருகின்றன. 

மேலும் சிட்ரா ஜவுளித்துறையில், நவீனமயாக்கல், சிக்கனம், தொழில்நுட்ப பொருளாதார தீர்வு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வருகிறது.மேலும் மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் டெக்ஸ்டைல் கமிஷனரின் தலைமையிலான  தொழில்நுட்ப ஜவுளித்துறை  (TMTT), யின் பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், சிஸ்பா உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகை கட்டணத்தில் இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் சிஸ்பா தலைவர் முருகேசன்,சிட்ரா இயக்குனர்  பிரகாஷ் வாசுதேவன், சிஸ்பா துணைத்தலைவர்  ஜெகதீஷ் சந்திரன், இந்திய ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், இந்திய பருத்திக் கூட்டமைப்பின் தலைவர் துளசிதரன்,ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன்,சிஸ்பா கவுரவ செயலாளர் வெங்கடேசன்,சிஸ்பா துணைத்தலைவர்கள் செல்வன்,விஜயக்குமார், இணை செயலாளர் அருண் கார்த்திக், மேலாளர் ஜெ.வெங்கடேஷ் பிரபு ,சிஸ்பா நிர்வாகிகள், உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments