தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையிலும் ஆதரவற்ற முதியவரின் சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்த காரைக்குடி ம.நீ.ம வேட்பாளர்!
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ச.மீ.ராசகுமார். மக்கள் மன்றத் தலைவரான இவர், நூற்றுக்கும் மேற்பட்ட, உறவுகளால் கை விடப்பட்ட ஆதரவற்றோர் இயற்கை எய்திய போது, அவர்களுக்கான இறுதிச்சடங்கினை செய்துள்ளார். இன்று காலை காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் இறந்த தகவல் அவருக்குக் கிடைக்கப்பெற்றது.
அவர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த நிலையிலும் அந்த முதியவரின் சடலத்தை காரைக்குடி சந்தப்பேட்டை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகளைச் நிறைவேற்றி, வழக்கம்போல் தன் கடமையினைச் செய்தார். அவருடன் மக்கள் மன்றத் தோழர்களுடன் கலந்துகொண்டு மரியாதை செய்தனர்.
- பாரூக், சிவகங்கை.
Comments