சாலையில் நடந்து சென்ற சிறுவனின் கழுத்தை கடித்த சிறுத்தை!! - பீதியில் மக்கள்!!
வால்பாறை: சோலையாறு எஸ்டேட் மூன்றாம் பிரிவில் வேலை செய்து வரும் மணியின் மகன் ஆகாஷ் ( வயது 12 ) ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை வேளையில் தன் நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுவனின் கழுத்தை கடித்தது. இதை கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்டதால் சிறுத்தை ஓடிவிட்டது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு சிறுவனை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
-திவ்யா குமார், வால்பாறை.
Comments