ஆண்டிபட்டியில் பத்திரிகையாளர்கள் சாலை மறியல்!!
சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி தொகுதிக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாா்ச் 12 ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கலில் முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதைத்தொடா்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை அதிமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனா்.
இதையடுத்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு 5 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளதாகவும் பிற பத்திரிகையாளா்களுக்கு அனுமதி இல்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதனால் போலீஸாருக்கும், பத்திரிகையாளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் பத்திரிகையாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கரன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி .
Comments