செல்போனால் விபரீதம்! தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன்! சீர்காழி அருகே நடந்த கொடூரம்!

 

-MMH

                  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் கலையழகி. முதுகலை பட்டதாரியான இவர், கடந்த 25 தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது தாய் தமிழ் செல்வி தனது உறவினர் இல்ல திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்பியபோது மகள் கலையழகி இரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். 

அதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்காடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தாய் தமிழ்ச்செல்வி மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக திருவெண்காடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டனர். இந்நிலையில் கலையழகியை அவரது பெரியப்பா மகன் ரகு என்பவர் கொலை செய்தது போலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கலையழகி அடிக்கடி தொலைபேசியில் உரையாடி கொண்டிருப்பதை கேட்ட அண்ணன் ரகு போன மாதம் கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று கலையழகி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதனைப் பார்த்த ரகு குடிபோதையில் கோபமடைந்து தனது சித்தப்பா மகளான கலைழகியை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கலையழகி ரகுவை, தான் அணிந்திருந்த காலணியால் அடித்துள்ளார். இந்நிலையில் ரகுவிற்கு கோபம் உச்சம் அடையவே அருகில் செல்போன் சார்ஜ் செய்யும் வயரை பயன்படுத்தி கலையழகி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலிஸார் ரகுவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-பாரூக்.

Comments