குறிச்சி அருகே தேமுதிக பிரமுகரின் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!!

-MMH

        கோவை குறிச்சி அருகே தேமுதிக பிரமுகர் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை குறிச்சி ஜி.கே.ஸ்கோயர் பகுதியை சேர்ந்தவர் சின்னசேட் என்கிற கனகராஜ். இவர் தேமுதிக குறிச்சி அவைத்தலைவராக உள்ளார்.  

மேலும் கட்டிட ஒப்பந்ததாரராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது காரை, வீட்டு வாசலில் நிறுத்திச் சென்றுள்ளார். அப்போது திடிரென கார் தீ பற்றி எரிந்துள்ளது. 

இதையடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் தீயை அணைந்தனர். இதையடுத்து சின்னசேட் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலிசார் கார் தானாக எரிந்ததா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனரா? 

- சீனி,போத்தனூர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments