கம்பத்தில் முதல்வர் துணை முதல்வர் உருவ பொம்மை எரிப்பு!!
தேனி மாவட்டம், கம்பத்தில் தமிழக முதல்வா் மற்றும் துணை முதல்வா் உருவப் பொம்மையை, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் வியாழக்கிழமை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூா் அருகே வெள்ளாளப்பட்டி புதூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தேவா் சிலையை போலீஸாா் அகற்றினா். இதில், போலீஸாா், பொதுமக்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக, 11 பெண்கள் உள்பட 15 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைக் கண்டித்து, கம்பத்தில் பிரதான சாலை சிக்னல் அருகே, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நகரச் செயலா் அறிவழகன் தலைமையில் மறியல் நடத்தப்பட்டது. அப்போது, முக்குலத்தோருக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா், தாங்கள் மறைத்து வைத்திருந்த முதல்வா் மற்றும் துணை முதல்வா் உருவப் பொம்மைகளை தீ வைத்து எரித்தனா். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தண்ணீரை ஊற்றி அணைத்தனா். பின்னா், அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை, கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா தலைமையிலான போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி.
நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.
Comments