தை மாசம் சூரியனுக்கு நாம பொங்க வைக்கிறதும்... சித்திரையில சூரியன் நமக்கு பொங்க வைக்கிறதும் சகஜமுங்கோ......! ஆனா இப்ப பங்குனியிலயே பத்திக்குச்சு மாமூ....!

     -MMH

     பங்குனி மாத வெயில் காலை பத்து மணிக்கே சுட்டுப்பொசுக்க ஆரம்பித்துள்ள நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தை மாதம் சூரியனுக்கு நாம பொங்கல் வைக்கிறதும்... சித்திரையில சூரியன் நமக்கு பொங்கல் வைக்கிறதும் சகஜம்தானேப்பா என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் விதம் விதமாக சூரியனுக்கு மீம்ஸ் போடுவார்கள். இதோ கோடை காலம் தொடங்கி விட்டது.

மார்ச்  19ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயரும்:

அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும்.

தெளிவான வானம்:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை:

வரும் 20ஆம் தேதியன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோ 'ஜில்'லுன்னு சில டிப்ஸ்!

வானிலை அறிக்கை எப்படியோ இருக்கட்டும்.  நீங்க தவறாம நிறைய தண்ணீர் குடியுங்கள்.

கண்டிப்பா எண்ணெய்ப் பொருட்களைத் தவிர்த்து, எளிதில் செரிக்கக்கூடிய நீர்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்க! குறிப்பா நுங்கு, இளநீர், வெள்ளைப்பூசணி, தர்பூசணி,  வெள்ளரிப்பிஞ்சு, முள்ளங்கி, சுரைக்காய் முதலிய காய் கனிகளை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள். பாலை மோராக்கி இஞ்சி சேர்த்துப்  ( உப்பு தாகத்தை அதிகரிக்கும். எனவே அளவான உப்புடன்) பருகுவது நன்மை பயக்கும். கம்பு போன்ற சிறுதானியக்கூழ் சின்ன வெங்காயத்துடன் குடிக்க, குளிர்ச்சியுடன் நோயெதிர்ப்பு சக்தியும் பெருகும். முதல் நாளிரவு நீரூற்றி வைத்த சாதத்தை,  காலை மோரூற்றிக் கரைத்துக் குடிக்க.......ஆஹா.......!

என்ன பார்க்கிறீங்க? நம்மால வெயிலைக் குறைக்க முடியாதுங்க. ஆனா ஏற்படவிருக்கும் பாதிப்பை கண்டிப்பாக் குறைக்க முடியும்....! அதுக்குத்தான் இந்த நினைவூட்டல் டிப்ஸ்! அப்புறம்.....இந்த தினம் இரண்டுமுறை குளிக்கிறது எல்லாம் சொல்ல வேண்டாம் தானே......!?

கோடையை 'ஜில்'லாக்கும் செய்தியுடன்,

-Ln.இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments