வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி மூலம் புதிய நோய்த்தொற்று அபாயம்!
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணி மூலம் புதிய நோய்த்தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது: வீடுகளில் வளர்க்கப்படும் பறவைகள், சிறு விலங்குகள், பூச்சிகள் என, செல்லப்பிராணிகளை சரிவர பராமரிக்காவிட்டால், அதன் வாயிலாக புதிய தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதை தடுத்து, முறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி உயிரினங்களை வளர்ப்போர், அதன் எண்ணிக்கை உள்பட முழு விபரங்களையும், 'கஅகீஐஙஉகுஏ.Nஐஇ.ஐN' என்கிற ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான காலக்கெடு ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பதிவாகும் விபரங்கள், வனத்துறையால், ஆய்வு செய்யப்படும். தடை செய்யப்பட்ட உயிரினங்கள் வைத்திருப்பது, பதிவு செய்யாமல், வெளிநாட்டு உயிரினங்கள் வளர்ப்பது கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளர் மீது, சட்ட நடவடிக்கை பாயும். ஏற்றுமதி செய்யவும், அனுமதி பெற வேண்டும். மேலும், தகவல் பெற, 94451-60708 என்ற மொபைல் எண்ணுக்கு பேசலாம். இவ்வாறு அவர் கூறினார்.
-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.
Comments