தஞ்சையில் அதிகரிக்கும் கொரானா!! - அச்சத்தில் மக்கள்!!

    -MMH
     தஞ்சையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரானாவால் மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர் .

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 8-ந் தேதி ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கும் 1,078 மாணவிகளுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

பரிசோதனை முடிவில் 58 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளின் கிராமங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 பெற்றோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.


இதனால் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கும், ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக பெண் உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியில் படிக்கக்கூடிய 117 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது

அதேபோல் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனால் மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6 மாணவிகளுக்கு தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. தஞ்சை தனியார் பள்ளியில் மேலும் 6 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.

கும்பகோணத்தில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியை மற்றும் 6 மாணவிகளுக்கும், ஒரத்தநாட்டில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவர்களுக்கும் கொரோனா தாக்கியுள்ளது. தஞ்சை அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை தஞ்சை, அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 11 பள்ளிகளை சேர்ந்த 26 ஆசிரியர்கள், 88 மாணவ-மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கும்பகோணத்தில்   கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும், திருவையாறில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 15 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 14 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் சமூக கூடமாக பள்ளிகள் மாறிக்கொண்டு இருக்கின்றனவா என்ற ஐயப்பாடு எழுகிறது .தமிழக மக்கள் தங்களை கடும் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள முகக்கவசம் தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது .

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments