எனக்கு கடவுளின் ஆசிர்வாதமே போதும்! திமுக தலைவரின் வாழ்த்து தேவையில்லை - எடப்பாடி பழனிச்சாமி .

-MMH

அயிரம்விளக்கு தொகுதியின் அதிமுக கூட்டணி பாஜகவின் சட்டமன்ற வேட்பாளர் நடிகை குஷ்பு அவர்களை ஆதரித்து ஆயிரம்விளக்கு பகுதியில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி அவர்கள்,  ஸ்டாலின் அவர்கள் இத்தொகுதி உறுப்பினராகவும் ,மேயராகவும் , துணை முதல்வராகவும் , எதிர்க்கட்சித் தலைவராகவும் பல்வேறு தளங்களில் பணியாற்றிய பொழுது  சென்னைக்கு ஆற்றிய வளர்ச்சி பணிகள் என்ன?

அவரின் கட்சியின் நிர்வாகிகள் பெண்களை குறித்து விமர்சிப்பதை ஆதரித்துவருகிறார் ,  அவர் கட்சியின் தலைவராக நிலைத்திருப்பதற்கு தகுதியற்றவர் என பேசினார். முன்னதாக தான் நீடித்து வாழவேண்டும் என வாழ்த்திய ஸ்டாலின் உடைய வாழ்த்து எனக்கு தேவையில்லை! கடவுளின் ஆசிர்வாதமே போதும்  என கூறினார்.

-நவாஸ்.

Comments