சிங்கம்புணரியில் திமுகவினரின் தேர்தல் பணிகள் குறி வைக்கப்படுகிறதா?
சட்டப்பேரவைத் தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சியினர் பம்பரமாக சுழன்று தேர்தல் பணி செய்து வருகின்றனர். அதைப்போலவே தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரசு அலுவலர்களும் மும்முரமாக பணி செய்கின்றனர்..
சிங்கம்புணரியில் திமுகவினர் ஆங்காங்கே பல்வேறு வீடுகளின் முகப்பில், உரிமையாளர்களின் அனுமதியோடு "ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு" என்ற வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.
அந்த ஸ்டிக்கர் உள்ளூரில் உள்ள மாற்று கட்சியினரின் கண்களை உறுத்தியதாகத் தெரிகிறது. அது சம்பந்தமாக தேர்தல் அலுவலரிடம் அவர்கள் புகார் அளித்ததாகவும் தெரிகிறது.
இன்று காலை தேர்தல் அலுவலர் சுதா தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழு திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு திமுககாரரின் வீட்டின் முன்பாக வந்து இறங்கியது. வீட்டின் முகப்பில் அந்த ஸ்டிக்கரை கண்ட அவர்கள், அந்த ஸ்டிக்கர் தேர்தல் விதியை மீறுவதாகவும், எனவே அந்த ஸ்டிக்கரை அகற்றும்படியும் கூறினர்.
உடனடியாக அந்த இடத்திற்கு வந்த திமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர், வந்திருந்த அரசு அலுவலர்களிடம் ஸ்டிக்கர் சம்பந்தமான தேர்தல் கமிஷன் உத்தரவை காட்டும்படி கேட்டனர். சம்பந்தமான உத்தரவை அரசு அலுவலர்களால் காட்ட இயலவில்லை. அதே நேரத்தில், அந்த ஸ்டிக்கரை தமிழகம் முழுக்க ஓட்டுவதற்கு திமுக தலைமை, தேர்தல் கமிஷனிடம் வாங்கி வைத்திருந்த அனுமதியை திமுக முன்னணி நிர்வாகிகள் அலுவலர்களிடம் காட்டினர். எனவே தேர்தல் அலுவலர்கள் வேறுவழியின்றி அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments