தஞ்சையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

      -MMH

       தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு வரும் குடிநீர் குழாய்  5 இடங்களில் பழுதுஅடைந்துள்ளது. அதனை  சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடிநீர் பிரதான குழாயில் அம்மன்பேட்டை மெயின் சாலையில் 2 இடங்களிலும், கண்டியூர் பகுதியில் 3 இடங்களிலும் பழுது ஏற்பட்டுள்ளது.

அதன்படி கண்டியூர் பெட்ரோல் பங்க் எதிர்புறம், பஸ் நிறுத்தம் அருகில், திருவையாறு- திருமானூர் சாலை ஆகிய இடங்களில் பழுதுகள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

2 நாட்களுக்கு நிறுத்தம்:

இதனால் தஞ்சை மாநகராட்சி வார்டு எண்1 முதல் 51 வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை), 19-ந்தேதி(வெள்ளிக்கிழமை)  ஆகிய 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்வதோடு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments