மேட்டுப்பாளையம் கோவை இடையே ரயில் சேவை தொடங்கியது!!

 

-MMH

     கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஓராண்டிற்குப் பிறகு தொடங்கியது. கொரானா நோய்த்தொற்று காரணத்தால் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது  நோய்த் தொற்று குறைந்த காரணத்தினால் பயணிகள் ரெயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு ரெயில் சேவை தொடங்கப்பட்டது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் விரைவு ரெயில் காலை 9.05 மணிக்கு கோவைக்கு சென்றடைகிறது. 

பின்னர் கோவையில் இருந்து மாலை 5.55 மணிக்குபுறப்பட்டு மாலை 6.55 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. ஆனால் தற்போது அந்த ரெயில் விரைவு ரெயிலாக மாற்றப்பட்டு கட்டணமும் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

-அருண்குமார் கோவை மேற்கு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments