வால்பாறை அரசு மருத்துவமனை மெத்தனப்போக்கை கைவிட வேண்டும்!!

-MMH

           வால்பாறை அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்சில் பொள்ளாச்சிக்கு அனுப்பி வைக்கின்றனர்.  மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் சாலையில் பயணிக்கும் பொழுது  பல இன்னல்களையும் கஷ்டங்களையும் சந்தித்து வருகின்றனர்.  மேலும் மருத்துவமனையில்  ஸ்கேன் எக்ஸ்ரா எடுப்பதற்கு மிஷின் இல்லாததால்  நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர்  கூறுகையில்: 

வால்பாறை அரசு மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் நோயாளிகளை பிற  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் இங்கேயே சிகிச்சை பெற ஏற்பாடு செய்து கொடுத்தாள் சிறப்பாக இருக்கும். மேலும் அரசும், அதிகாரிகளும் இந்த விஷயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்காமல்  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல வால்பாறை வாழ் மக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும் என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வால்பாறை,திவ்யா குமார்.


Comments