தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!! மீண்டும் லாக்டவுன் அமல்!! தலைமை செயலாளர் இன்று அவசர ஆலோசனை!!
சென்னை: தமிழகத்தில் ஒருநாளைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் லாக்டவுனை அமல்படுத்துவது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 10,000க்கும் கீழே இருந்தது. தற்போது இது 25,000-த்தை தாண்டியதாக இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு 24,492 ஆக உள்ளது. அதேபோல் 24 மணிநேரத்தில் 131 பேர் நாடு முழுவதும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,831.
நாடு முழுவதும் இதுவரை 3.2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒருநாள் பாதிப்பு 800க்கும் அதிகமாக இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் 5,000-த்தை தாண்டியது.
இதனைத் தொடர்ந்து இன்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் லாக்டவுன் அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.
Comments