எஸ்.பி. வேலுமணி, இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணித்தலைவருடன் சந்திப்பு....
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குக்களை சேகரித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி.கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி போட்டியிட தனது விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ள, நிலையில் செல்வபுரம் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இரு சக்கர வாகனத்தில் மூலமாக சென்று, அனைத்து வீடுகளுக்கும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார், இதன் ஒரு பகுதியாக கோவை செல்வபுரம் பகுதிக்கு வருகை புரிந்த அமைச்சர் எஸ் பி வேலுமணியை,
இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணித்தலைவர் பிரசன்ன சுவாமிகள், பூரண கும்ப மரியாதை அளித்து அவரை வரவேற்றார், கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி, அந்த பகுதியில் உள்ள மக்களை, நேரடியாக சந்தித்து தனது வாக்குகளை பெற்றார், இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் பலவற்றை கேட்ட அமைச்சர் எஸ் பி வேலுமணி தேர்தல் முடிந்ததும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும், நல்லாட்சி மலர்ந்ததும் , உங்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்து வைப்பதாக தெரிவித்தார், இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இனிப்புகள் வழங்கி, இலவச அன்னதானம் வழங்கபட்டது குறிப்பிடத்தக்கது.
- சீனி,போத்தனூர்.
Comments