சிங்கம்புணரியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கோலாகலமாக நடைபெற்றது!
திருப்பத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதல்முறையாக சிங்கம்புணரி வருகை தந்த திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களுக்கு ஒன்றிய, நகர திமுகவினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அண்ணா மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அலுவலகத்தை கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின்போது 200 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி கேஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதன் பின் யாதவா மஹாலில் திமுக கூட்டணி கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது அங்கு கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான திமுகவினரும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். திமுக ஒன்றிய செயலாளர் பூமிநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ந.அம்பலமுத்து மற்றும் சோமசுந்தரம்,
பேரூர் கழக செயலாளர் யாகூப், ஒன்றிய துணைச் செயலாளர் சேகர், ஒன்றிய இளைஞர் அணி மனோகரன், காங்கிரஸ் சார்பாக முன்னாள் எம்எல்ஏ இராம.அருணகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் சாந்தி மற்றும் கிருங்கை செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தோழர் கரிகாலன், மமக சார்பில் ஜாபர் அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஹைதர் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காளிதாஸ், மக்கள் விடுதலை கட்சி சார்பில் அரசினம்பட்டி பாலு, பார்வர்டு பிளாக் சார்பில் வடிவேலு மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments