மின்கம்பத்துக்குள் சாக்கடை கால்வாய் அமைப்பு!!

     -MMH

     கோவை மாவட்டம், செல்வபுரம் சிறுவாணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது முத்துசாமி காலனி, இந்த பகுதியில் பல மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட கால்வாயில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அதனை அகற்றாமல் அதனை சுற்றி அப்படியே கட்டி உள்ளனர்.

இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி உள்ளது. கழிவு நீர் வெளியே செல்ல முடியாமல் கம்பத்தை சுற்றிலும் மண் மூடியுள்ளது. எனவே தகுந்த பாதுகாப்புடன் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் நடுமா மின்சார வாரியம்?என்ற கேள்வியோடு மக்கள்!!

நாளையவரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments