கொரோனா பரவல் காரணம் பீளமேடு வங்கி தற்காலிக மூடல்!!!

 

-MMH

          ந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்படுவதை நாம் அறிவோம். கோவை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளையில் பல ஊழியர்களுக்கு கொரனோ  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

ஆகையால் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா பீளமேடு கிளை மூடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள ஆவாரம்பாளையம், காளப்பட்டி கிளைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

-கோபி. 

Comments