தேர்தல் எதிரொலி! கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ்., மாநகர ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்பு!

 

-MMH

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ்., பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சுமித் சரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியராக நாகராஜன் இன்று காலை புதிய ஆட்சியராக பெற்றுக்கொண்டார்.

இதனைத்  தொடர்ந்து டேவிட்சன் தேவாசீர்வாதம் கோவை மாநகர காவல் துறையின் புதிய ஆணையராக  பதவியேற்றுக் கொண்டார். இவர் கூடுதல் காவல் துறை இயக்குனர் பொறுப்பில் உள்ளவர் என்பதும், கோவை மாநகர காவல்துறையில் இதுவரை மேற்கண்ட பொறுப்பில் இருந்த யாரும் ஆணையராக பதவி வகிக்கவில்லை என்பதும் குறிப்பிடக்தக்கது.

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments