துணை சபாநாயகர் குற்றச்சாட்டு..!!

     -MMH

பொள்ளாச்சி தோல்வி பயத்தில், தி.மு.க.,வினர் வன்முறையை கையில் எடுத்துள்ளனர் என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டினார்.

பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர் துணை சபாநாயகர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது பொள்ளாச்சியில் ஐந்து ஆண்டு காலத்தில் செய்துள்ள பணிகள் கொரோனா காலத்தில் மக்களோடு இருந்து பணியாற்றியதால் ஓட்டு சேகரிக்க செல்லும் இடங்களில் மக்கள் வரவேற்பு உள்ளது.

இதனை பொருத்து கொள்ளமுடியாத தி.மு.க.,வினர், தோல்வி பயத்தில் வன்முறையை கையில் எடுக்க துவங்கியுள்ளனர்.தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்யும் பெண், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையப்படுத்தி பேசி வருகிறார். 

ஒக்கிலிபாளையத்தில் தேர்தல் பிரசாரத்தில் அந்த பெண் பேசிய போது, 'பல நுாறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பேசுவதால், பொள்ளாச்சியின் பெருமை பாழ்படுகிறது; இது குறித்து பேச வேண்டாம்,' என, அ.தி.மு.க.,வினர் கூறியுள்ளனர்.அப்போது, நான், குள்ளிச்செட்டிபாளையத்தில் பிரசாரத்தில் இருந்தேன். 

அந்த இடத்தில் என் மகனும் இல்லை. ஆனால், தி.மு.க.,வினர் பொய்யான புகாரை கொடுத்து, என் மீதும், மகன் மீதும்தீண்டாமை வழக்கு, அடிதடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் புகார் கொடுத்துள்ளேன்.

இந்த வழக்கு தொடர்பாக, 'என் குடும்பத்தினர் மீது சிறு ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள்; அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறேன்,' என ஸ்டாலினுக்கு சவால் விட்டேன். இதுவரை அவர்களால் ஆதாரமும் கொடுக்க முடியவில்லை. 

இனி தி.மு.க.,வின் பிரசாரத்தை மக்கள் நம்ப தயராக இல்லை. நெகமத்தில் இச்சம்பவம் தொடர்பாக பேசிய தயாநிதி மாறன் மீதும் வழக்கு தொடர்வேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.ஆளுங்கட்சியால் உயிருக்க ஆபத்து.

தி.மு.க., வேட்பாளர் வரதராஜனை ஆதரித்து பிரசாரம் செய்யும் சபரிமாலா, நிருபர்களிடம் கூறியதாவதபிது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பேசி, தி.மு.க.,வுக்கு ஓட்டு சேகரிக்கிறேன். ஒக்கலிபாளையத்தில், ஆளுங்கட்சி ஆதாரவாளர்கள், தாக்க முயன்றனர்.பொதுமக்கள் பாதுகாப்பு வளையம் அமைத்து, என்னை பாதுகாப்பாக வெளியேற்றினர். அவர்களை பற்றி பேச முயன்ற எனக்கே பாதுகாப்பு இல்லை. இந்நிலையில், என் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து, ஆளுங்கட்சியினர் எனது பிரசாரத்தை முடக்க, வன்முறையை துாண்டி விடுவதால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். பிரசாரத்தை பாதுகாப்பாக தொடரவும், உயிருக்கும் பாதுகாப்பும் வேண்டும், என, கடிதம் கொடுத்துள்ளேன்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில், ஆளுங்கட்சி தரப்பினருக்கு தொடர்பு இருப்பதால் தான், எனது பிரசாரத்தை, வன்முறையை கையாண்டு முடக்கப் பார்க்கின்றனர். அவர்களுக்கு சாதகமான அமைப்புகளை கொண்டு, பாலியல் சம்பவம் குறித்து பேசுவதற்கு, ஒட்டுமொத்த பொள்ளாச்சி மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல போலி பிரசாரம் செய்கின்றனர்.இவ்வாறுஅவர் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments