அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முதல்வர்களுடன் பிரதமர் அவசரக் காணொளிக் கலந்தாய்வு!

 

-MMH

      ஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்தது. இதனால், மக்கள் கொரோனா விதிமுறைகளை கையாளுவதில் அலட்சியம் தொடங்கினர். இதனை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன் இருந்தது போலவே மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்தியுள்ளதோடு, மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments