கொரோனா - மொத்த நாடும் ஆபத்தில் உள்ளது! மத்திய அரசு எச்சரிக்கை!

 

-MMH

           கொரோனா பாதிப்பு நிலவரம் மோசமான நிலையிலிருந்து மிக மோசமான நிலைக்கு அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் டெல்லியில் கூட்டாக பேட்டியளித்தனர்.

ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 10 மாவட்டங்களில் 8 மகாராஷ்டிராவில் உள்ளன. இதுதவிர டெல்லி, பெங்களூருவில் பாதிப்பு அதிகமுள்ளது,’’ என்றார். வி.கே.பால் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு ‘மோசம்’ என்ற நிலையில் இருந்து ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியிருக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும், மாவட்டமும், எந்த பகுதியும், உண்மையான ஆபத்தை அறியாமல், சுய திருப்தி அடையக் கூடாது. 

ஒட்டுமொத்த நாடும் ஆபத்தில் உள்ளது. எனவே, பரவலை கட்டுப்படுத்தி, உயிர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இன்னும் பாதிப்புகள் அதிகரித்தால் நாட்டின் சுகாதார அமைப்பே திணறிவிடும். எனவே, மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை ஏற்பாடுகளுடன் முழுமையான தயார் நிலையில் இருக்க வேண்டும்,’’ என்றார்.

- பாரூக்.

Comments