சேலம் - கோவை இடையே கூடுதல் குளிர்சாதன பேருந்துகள்! கோடையை எதிர்கொள்ள குளுகுளு நடவடிக்கை!

-MMH

            வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், சேலம் - கோவை இடையே இயக்கப்படும் குளிர்சாதன பஸ்களின் எண்ணிக்கை, 17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், குளிர்சாதன பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரம், சேலம் - கோவை மார்க்கத்தில், குளிர்சாதன ரயில்களின் இயக்கம், கொரோனாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால், அப்பயணியரை இழுக்க, கோவை கோட்ட போக்குவரத்துக்கழகம், சேலம் - கோவை மார்க்கத்தில், ஏழு பஸ்கள் இயக்கியதை, தற்போது, 17 ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து, சேலத்துக்கு பஸ்கள் புறப்படும் நேரம்: காலை, 5:25, 6:36, 7:40, 8:00, 8:35, 11:38; மதியம், 12:41, 12:48, 2:38, 3:35, 3:58. மாலை, 5:33, 6:20, இரவு, 7:50, 9:10, 12:20, காலை, 3:45. சேலம், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, கோவைக்கு புறப்படும் நேரம்: காலை, 4:27, 7:15, 8:40, 11:05; மதியம், 12:15, 12:30, 1:10, 1:25; மாலை, 4:50, 5:30; இரவு, 9:20, 9:30, 11:10, 11:40, 12:20, காலை, 3:20. இந்த பஸ்சில், கட்டணம், 190 ரூபாய்.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், 'வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பயணியர் வசதிக்கு, குளிர்சாதன பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை. ஜெய்க்குமார்.

Comments