டாக்டர் கணவர் போட்ட ஊசியில் மனைவி மரணம்! மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

 

-MMH

     டாக்டர் கணவர் போட்ட ஊசியில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது மனைவி இறந்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் ஹரிணி (26). முதுநிலை மருத்துவ மாணவியான இவர், தன்னுடன் படித்த விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் மாரச் 5ஆம் தேதி ஹரிணிக்கு காய்ச்சல் வந்துள்ளது. இதனையடுத்து டாக்டரான அவரது கணவரே ஹரிணியை வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்துள்ளார். அப்போது அவர், தமது மனைவிக்கு ஊசி ஒன்றை போட்டுள்ளார். உடனே அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த விக்னேஷ் ஹரிணியை அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஹரிணி இறந்தார்.

மகளின் மறைவால் மனமுடைந்த ஹரிணியின் தந்தை, அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிணி மயக்க மருந்தியல் படிப்பில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ராயல் ஹமீது.

Comments