இன்று தீராத நோய்களை தீர்க்கும் பங்குனி சங்கடஹர சதுர்த்தி!!

     -MMH

பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தி  சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது இந்த நாள் விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சிறப்பான ஒரு நாளாக ஆன்மீக பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது .

விரதம் கடைபிடிக்கும் முறை:

அதிகாலை எழுந்து குளித்து நீராடி விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகர் பாடல்களைப் பாடி மனதார வழிபட்டு மாலை வரை விரதமிருந்து மாலை நடைபெறும் விநாயகர் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை உண்டு விரதத்தை முடிக்கும்  பக்தர்களுக்கு விநாயகர் சகல அருளாசியும் வழங்குவார் என்பது  ஆன்மீக சான்றோர்களும் தீராத நம்பிக்கை.

 ஹர என்றால் நீக்குவது என்று பொருள். இந்த நாள் சங்கடங்களை நீக்குவதால் சங்கட ஹரசதுர்த்தி என்று வழங்கப்படுகிறது.

பங்குனி மாதம் வரும் சதுர்த்தி ஆனது நோய்களை நீக்கக் கூடிய தன்மை உடையதாக நம்பப்படுகிறது.

இந்த சிறப்பான நாளில் பக்தர்கள் விநாயகருக்கு பிடித்த அருகம்புல் மற்றும் கொழுக்கட்டை படைத்து வழிபாடு செய்து ஐந்து கரத்தானை மனம் குளிர்விக்கலாம்.

 வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம், மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு என்ற விநாயக ஸ்லோகத்தை மூன்று முறை சொல்லி விநாயகர் அருளாசியை பெறலாம் .

மேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை தெரிந்துகொள்ள நாளைய வரலாறு பத்திரிக்கையை தொடர்ந்து படியுங்கள்.

 ஆன்மீக செய்திக்காக,

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments