குச்சனூர்-சங்கராபரம் இணைப்பு சாலையை விரைவில் சீரமைக்க மக்கள் கோரிக்கை!!

 

-MMH

       தேனி மாவட்டம் குச்சனூா் - சங்கராபுரம் இணைப்பு சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். குச்சனூரிலிருந்து போடிநாயக்கனூா் செல்வதற்காக குச்சனூா்- சங்கராபும் இணைப்புச் சாலை உள்ளது. இச்சாலையை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். இந்த சாலை பள்ளம், மேடாக மாறியதால் விவசாயிகள் அவதியடைந்தனர்

இதையடுத்து இந்த சாலை சீரமைப்புப் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. தற்போதுவரை 30 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளன. பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளமும் அப்படியே கிடப்பதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கிடப்பில் போடப்பட் குச்சனூா் - சங்கராபுரம் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

Comments