உலர் திராட்சையில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா...!!

     -MMH 

     கருப்பு நிற உலர் திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 20-25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.

உலர் திராட்சையை கொதிக்க வைத்து, மசித்து தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். சுகமான தூக்கத்திற்கு பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி வடிகட்டிய பாலை அருந்தினால் போதும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன. ஆண்கள் விறைப்புத் தன்மை குறைப்பாட்டில் அவதிப்பட்டால், நாள்தோறும் உலர் திராட்சைகளை ஒரு கையளவு உட்கொள்ள வேண்டும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வாகவும் இருக்கின்றன. எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உலர் திராட்சை அதிகம் உள்ளது.   

-ஸ்டார் வெங்கட்.

Comments