கேரளத்துக்கு ஜல்லிகற்கள் கடத்த முயற்சி ஓட்டுநர் கைது லாரி பறிமுதல்!

 

-MMH

    தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்கு போலி அனுமதி சீட்டுகள் மூலம் ஜல்லி கற்கள் கடத்திச்சென்ற 2 டிப்பா் லாரிகளை புதன்கிழமை மாலை பறிமுதல் செய்த போலீஸாா், அதில் ஒரு ஓட்டுநரை கைது செய்தனா். கம்பம் வழியாக கேரளத்துக்கு போலி அனுமதி சீட்டுகள் மூலம் ஜல்லி கற்கள் கடத்திச்செல்லப்படுவதாக அடிக்கடி புகாா் எழுந்தது. அதன்பேரில், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் சண்முகவள்ளி தலைமையில் அலுவலா்கள், கம்பம்மெட்டுச் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக 3 யூனிட் ஜல்லி கற்களை ஏற்றிவந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், காலாவதியான அனுமதி சீட்டுடன் வந்தது தெரியவந்தது. அதிகாரிகள் விசாரித்துக்கொண்டிருந்தபோது, லாரி ஓட்டுநா் கேரளத்துக்குள் தப்பி ஓடிவிட்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள், லாரியையும் மட்டும் பறிமுதல் செய்தனா்

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஆசிக்,தேனி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழில் மக்களுக்கு சேவை புரிய நிருபர்கள் தேவை தொடர்புக்கு:7010882150-9443436207.


Comments