பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராமன் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை அறிவித்து பிரச்சாரம்!!
பொள்ளாச்சி சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயராமன் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக குமரன் நகர் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது பொள்ளாச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்று தெருவித்தார்.
அரசு பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம், நகர ரோடுகள் விரிவாக்கப் பணிகள், ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது, மீண்டும் நமது ஆட்சி அமைந்ததும் விடுபட்ட ஏழை மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும், ஆனைமலையாறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான பொள்ளாச்சியை மாவட்டமாக உயர்த்திட முழு முயற்சி மேற்கொள்வேன் என்றார்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments