கோவை சிலொம் தாமஸ் கண் மருத்துவமனையில் வாஸ்குலர் கோளாறுகளை கண்டறியும் அதி நவீன கருவி அறிமுகம்!!

     -MMH
     பார்வை குறைபாடு தொடர்பான நோய்களை ஆரம்பித்திலேயே கண்டறியும் வகையிலான வாஸ்குலர் கோளாறுகளை கண்டறியும் அதி நவீன கருவியை 'கோவை சிலொம் தாமஸ் கண் மருத்துவமனை' அறிமுகம் செய்துள்ளது.

கண் சிகிச்சைக்கென கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர் 'சரோஜினி தாமஸ்' என்பவரால் துவங்கப்பட்டு, 43 ஆண்டுகளாக,சாதி மத பேதமின்றி குறைந்த கட்டணத்தில் கண் மருத்துவ சேவையை வழங்கி வருகின்றனர் சாய்பாபாகாலனியை சேர்ந்த சிலோம் தாமஸ் கண் மருத்துவமனை.

இந்நிலையில் இம்மருத்துவமனை சார்பாக,வாஸ்குலர் கோளாறு அறியும் அதி நவீன கருவி அறிமுக விழா ,கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அரங்கத்தில் நடைபெற்றது. மருத்துவமனையின் நிறுவனர் சரோஜினி தாமஸ் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் 'டாக்டர் குமார்' நவீன இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார். 

தொடர்ந்து தற்போதையை கண்பார்வை குறைபாடு நோய் குறித்தும் அதனை எளிதில் சிகிச்சையளிக்கும் முறைகள் குறித்தும், மருத்துவமனையின் இயக்குனரும், கண் அறுவை சிகிச்சை நிபுணருமான 'டாக்டர் தேவ்தத் தாமஸ்' செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது அவர். "தற்போது அறிமுகம் செய்துள்ள நவீன இயந்திரத்தின் வாயிலாக குளுக்கோமா மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி காரணமாக குறுக்குவெட்டு ரெட்டினல், ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் செய்வதன் மூலம் ஏற்படும் ஆரம்ப மாற்றங்களை கண்டறிய முடியும் எனவும் காண்ட்ராஸ்ட் சாயத்தை செலுத்தாமல், கண்ணில் உள்ள வாஸ்குலர் கோளாறுகளை கண்டறிவதில் இந்த இயந்திரம் முக்கிய பங்கு வகிக்கும்" எனவும் அவர் தெரிவித்தார். 

விழாவில் ஒரு பகுதியாக மருத்துவமனையின் 43 ஆம் ஆண்டு நினைவு மலரை  அவினாசிலிங்க பல்கலைகழக துணை வேந்தர் 'டாக்டர் பிரேமாவதி விஜயன்' வெளியிட்டார்.

- சீனி,போத்தனூர்.

Comments