வீடு கட்டுமான பனியினால் வீதிகளில் போக்குவரத்து பாதிப்பு விபத்து ஏற்படும் அபாயம்..!! மக்கள் பீதி!!!
கோவை மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் போக்குவரத்து பாலங்கள் வேலை நடந்துகொண்டு இருப்பதாலும் மேலும் எல்லா இடங்களிலும் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டு இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் மிகவும் மோசமான நிலையை அடைந்து மக்களை வேதனைப்படுத்தி கொண்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் சுற்றுவட்டார போத்தனூர் பகுதிகளிலும் ஒவ்வொரு வீதிகளிலும் தன்னுடைய சொந்த வீட்டு கட்டுமான பணி நடக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தங்கள் வீதிகளில் கட்டுமானப் பணிக்கான பொருட்களைக் கொண்டுவந்து கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் ( ஜல்லி, மணல், செங்கல் ) போன்றவைகளை வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக போட்டுவிட்டு கட்டுமான பணிக்கான வேலைகளை தொடர்கின்றனர்.
இதனால் இரவும் ,பகலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனத்தில் செல்பவர்கள் சில நேரங்களில் விபத்துகளில் மாட்டிக் கொள்கின்றனர். வாகனங்களை சரியாக இயக்க முடியாமல் இடையூறாக கட்டுமான பொருட்கள் இருப்பதால் மிகவும் அவதிப்படுகின்றனர் .இதை கட்டுமானப்பணிகள் நடத்தும் வீட்டின் உரிமையாளர்கள் புரிந்து கொள்வதில்லை.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினால் அவர்களும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக சுந்தராபுரம் முருகா நகர் பகுதிகளில் பெரிய சேர்வை வீதி பகுதிகளிலும் ஆண்டாள் தோட்டப் பகுதிகளிலும் மற்றும் அய்யர் ஆஸ்பிட்டல் பகுதிகளிலும் மிகவும் மோசமான நிலை அடைந்து வருகின்றது. இந்த சூழ்நிலையை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொண்டு நடக்கும் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்களா?
-கிரி,ஈஷா.
Comments