GST வரிஏய்ப்பில் பித்தலாட்டம் புரிவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்!

 

-MMH

               க்களவையில் மத்திய நிதியமைச்சகம் தாக்கல் செய்த அறிக்கையானது :  கடந்த 2017-18 முதல் 2020-21 வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டியில் வரிஏய்ப்பு செய்தவர்களின் வழக்கு எண்ணிக்கை 27000 ஆகும், இதில் 3295 வழக்குகளை கொண்டு டெல்லி முதலிடத்திலும் 3220 வழக்குகளை கொண்டு தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றது.

போலியான நிறுவனத்தை கொண்டிருத்தல் , போலியான ஆவணங்களை உருவாக்கி வரிகளை தாக்கல் செய்தல் போன்ற காரணங்களில் இத்தகைய தவறுகள் நிகழ்தபடுகின்றது . பல்வேறு வழக்குகளில் KYC ஆவணங்களை பிறரிடம் பெறுவதின் மூலமாகவும் , பான் எண் -  ஆதார் எண் - போட்டோ மூலமாகவும் கற்பனையான நிறுவனங்களை உருவாக்கியும் இத்தகைய தகிடுத் தத்தங்கள் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நவாஸ்.

Comments