பொள்ளாச்சி அருகே கஞ்சா கடத்தல்! போலீசார் விசாரணை..!!

     -MMH

     பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமரன் மீன்கரை சாலையில் சீனிவாசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது ஆட்டோவில் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து ஆட்டோ ஓட்டி வந்த சீனிவாசபுரம் முகமது ரசூலை கைது செய்ததோடு ஆட்டோவையும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து  சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இந்த கஞ்சா எங்கிருந்து வந்தது...? யாருக்கு செல்கிறது...? எங்கெல்லாம் விற்கப்படுகிறது...? இதனுடைய ஆரம்பம் எங்கே ...? என அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினர்.  இவர்களின் கேள்விகளுக்கு  போலீஸ் அதிகாரிகள் பதில் தருவார்களா.. அல்லது மூடி மறைப்பார்களா..பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments