கொரோனா அதிகரித்து வரும் நிலையில் 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை !! சென்னை உயர்நீதிமன்றம்!!

    -MMH
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றத்திற்கு வருவோரின் எண்ணிக்கையை குறைத்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

அரசின் கோரிக்கையை ஏற்று மீண்டும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வருகிற 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பி.தனபால் அறிவித்துள்ளார்.

மேலும் வழக்கறிஞர் அறைகள், வழக்கறிஞர் சங்க அறைகள் மற்றும் நூலகங்களை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மறு அறிவிப்பு வருகிற 22ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்திர குமார்.

Comments