தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று!!

      -MMH

     தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று  மேலும் 4,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3,23,452 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,661 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2,23,78,247 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று  மட்டும் 1,30,042 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,20,05,237 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று  மட்டும் 1,25,004 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா  நிலவரம்:

தமிழகத்தில் தற்போது 1,10,308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 6,82,519 பேர் ஆண்கள் . 4,47,610 பேர் பெண்கள் . தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments