சின்னமலைக்கவுண்டர் 266 வது பிறந்த நாள் விழா !

     -MMH
     இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து தன் இன்னுயிர் நீத்த, கொங்கு மண்ணின் மாவீரன், தியாகி தீரன் சின்னமலைக்கவுண்டர் அவர்களின் 266 வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி. மு. க. சார்பாகச் சரவணம்பட்டியில் உள்ள மாவட்டக் திமும அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ். பழனிச்சாமி, சரவணம்பட்டி பகுதி திமுக பொறுப்பாளர் சிவா (எ) பழனிச்சாமி, அரசூர் பூபதி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் சுரேஷ், வட்ட கழகச் செயலாளர்கள் கதிர்வேல், கந்தசாமி, கழக நிர்வாகிகள் அரங்கசாமி, இளங்கோவன், ஞானராஜ், திலீப், ரங்கசாமி, செந்தில், சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி. மு. க., கழக ஆட்சியில் சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை அவர்களுக்குச் சிலை வைக்கப்பட்டது என்பதையும், தி. மு. க மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்தபோது நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது என்பதையும் இத்தருணத்தில் நினைவுகூர்வோம் எனவும், தீரன் சின்னமலையின் தியாகத்தையும் - வீரத்தையும் போற்றி வணங்குவோம். எனக் கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வையா என்கிற கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments