இந்த நாட்டில் 3 நாட்கள் தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ18 ஆயிரம் வழங்கப்படும்!!

   -MMH

கடந்த ஆண்டு முதல், கொரோனா பரவலால் உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்ததை அடுத்து, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், விலங்கியல் பூங்காக்கள் ஆகிய அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒவ்வொன்றாக தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பயத்தினால் சுற்றுலா செல்ல அநேகர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் விதமாக மால்டா அரசு புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதன் படி, தங்களின் நாட்டுக்கு சுற்றுலா வந்து 3 நாட்கள் தங்கி செல்பவர்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கேட்பதற்கு சற்று ஆச்சரியமாக இருக்காலம், ஆனால் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வரும் நபர்கள் 3 நாட்கள் தங்கியிருக்க வேண்டும், அப்படி தங்கி இருந்தால், ரூ 18 ஆயிரம் வழங்கப்படும். ஆனால், அதற்க்கு அவர்கள் வெளிநாட்டு பயணிகளாக இருக்க வேண்டும். இந்த அறிவிப்பு தற்போது பெரும்பாலானோரை கவர்ந்துள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் அறைகளை ஒதுக்கினால் 200 யூரோக்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்கினால் 150 யூரோக்களும், 3 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினால் 100 யூரோக்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதே சமயம், இங்கு கொரோனா பாதிப்பு குறைந்தே காணப்படும் நிலையில், ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்படும் நாடுகளில் மால்டா முக்கியமானது.

-சுரேந்திர குமார்.

Comments