தமிழகத்தில் 3 நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா! இன்று முதல் நடக்கிறது!

 

-MMH

           மிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்த அறிவுறுத்தியிருந்தது. இதையொட்டி, தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதிற்குமேல் உள்ள அனைவருக்கும் 100 விழுக்காடு தடுப்பூசி போடும் பணியை இந்த நாள்களில் முடிக்க அரசு முடிவெடுத்துள்ளது. சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பப்படுபவர்கள், பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments