சிங்கம்புணரி வட்டாட்சியர் உள்பட 317 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

 

-MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சுந்தரம்நகர் மக்கள் மன்றத்தில்  பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சிங்கம்புணரி அரிமா சங்கம் சார்பில்  இலவச கொரோனா தடுப்பூசி திருவிழா முகாம் நேற்று நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு தலைமையில் மருத்துவர் முத்தமிழ் செல்வி மற்றும் சேவுகா அரிமா சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசித் திருவிழா நடைபெற்றது. 

முன்னதாக 45 வயதானவர்களுக்கு முகாமில் மருத்துவர் முத்தமிழ் செல்வி தலைமையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர்களின் ஆதார் கார்டுகளை சரி பார்த்து அவர்கள் இதற்கு முன்பு தடுப்பூசி போட்டு கொண்டார்களா? என்பது குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இச்சிறப்பு முகாமில் 317 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு பொதுமக்களுடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். மது அருந்துவது மற்றும் உணவுகள் குறித்து தடுப்பூசி போட்டு கொண்ட நபர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் தினகரன், மதியரசு, உதவியாளர்கள் எழில்மாறன், முகமது பஷீர் மற்றும் செவிலியர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவினர் கொரோனா தடுப்பூசி திருவிழா முகாமை நடத்தினர். சிங்கம்புணரி சுற்றுவட்டார பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சுகாதாரத் துறையினருடன் ஆர்வமுடன் ஒத்துழைப்பதால், சிங்கம்புணரி பகுதியில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு வராமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அப்துல் சலாம்.

Comments