பொள்ளாச்சியில் 40 பேருக்கு தொற்று..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரப்பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டுகின்றனர். பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ. சங்கம்பாளையம், கூளநாயக்கன்பட்டி, எஸ். சந்திராபுரம், கோமங்கலம்புதுார், சூளேஸ்வரன்பட்டி, மாக்கினாம்பட்டி, குறிஞ்சேரி, கருப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், மொத்தம், 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெகமம் சந்திராபுரம், அனுப்பர்பாளையம் பகுதிகளில் தலா இரண்டு பேருக்கும் போத்தனுார், தமிழ்மணி நகர், ஜீவாநகர், தாளக்கரை உள்ளிட்ட பகுதிகளில், தலா ஒருவர் என மொத்தம், எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரே நாளில், 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.கபசுர குடிநீர்பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த குடியிருப்பு பகுதிகளில், சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கோட்டூர் ரோடு நேருநகர் பகுதியில், சித்தா பிரிவு சார்பில், மருந்தாளுனர் காமராஜ், கபசுர குடிநீர், மக்களுக்கு வினியோகித்தார். '
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.முகக்கவசம் கட்டாயம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.அரசின் அறிவுரைகள் கேட்டு மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.
Comments